முதுநிலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 2174 முதுநிலை ஆசிரியர்களுக்கு மதுரை உட்பட ஏழு மாவட்டங்களில் சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்.,29, 30 மற்றும்
அக்.,1ல் பயிற்சிகள் நடக்கின்றன.

இதுகுறித்து மாவட்டங்களில் பயிற்சி நடக்கும் இடம் மற்றும் ஆசிரியர்கள் விவரம்:

மதுரை: அழகர்கோவில் மகாத்மா பள்ளியில், 178 வரலாறு ஆசிரியர்கள். திண்டுக்கல்: பாறைப்பட்டி ஆர்.வி. எஸ். பொறியியல் கல்லூரியில், 225 இயற்பியல் ஆசிரியர்கள்.சேலம்: சின்னதிருப்பதி ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 219 வேதியியல் ஆசிரியர்கள்.

நாமக்கல்: திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 317 ஆங்கிலம் மற்றும் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் 191 தாவரவியல் ஆசிரியர்கள்.

விழுப்புரம்: சின்னசேலம் சிறுமலர் பள்ளியில் 283 கணித ஆசிரியர்கள்.

ஈரோடு: கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளியில் 178 விலங்கியல் ஆசிரியர்கள் மற்றும் வெங்கடேஸ்வரா பள்ளியில் 313 வணிகவியல் ஆசிரியர்கள்.பயிற்சி விவரம் மற்றும் பங்கேற்கும் நேரம் குறித்த தகவல் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...