தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதை அடுத்து, இந்த ஆண்டும் புதிய குடும்ப அட்டையை வழங்காமல் இணைப்புத் தாள் ஒட்டப்படும் என உணவுப் பொருள் துறை தெரிவித்துள்ளது.
தமிழக மக்களைப் பொருத்தவரை உணவுப் பங்கீட்டு அட்டை (குடும்ப அட்டை) என்பது உணவுப் பொருள்கள் வாங்குவதற்கு மட்டுமல்ல; அரசுக்கும், மக்களுக்குமான உறவுப் பாலமாக திகழ்ந்து வருகிறது.
பிறப்பு, இறப்புச் சான்றிதழ் தொடங்கி அரசின் நலத் திட்டங்கள் என அனைத்துத் தேவைகளுக்கும் குடும்ப அட்டை மிக, மிக அவசியம். இவை ஒன்று மட்டுமே ஏழை, பணக்காரன் என்றில்லாமல் அனைவருக்கும் அவசியமானது.
உணவுப் பங்கீட்டு அட்டை 2 கோடி குடும்பங்களுக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு அரசால் வழங்கப்பட்டது. இந்த அட்டை 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதாவது 2009-ஆம் ஆண்டு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருப்பதால் கணக்கெடுக்கப்பட்டு புதிய அட்டை வழங்கப்படும் என்று அப்போதைக்கு அரசு அறிவித்தது. இதற்கான கால அவகாசத்துக்காக ஒரு ஆண்டுக்கான இணைப்புத் தாள் ஒட்டப்பட்டது. இப்படி 2009-ஆம் ஆண்டு தொடங்கி 2014 வரை 5 ஆண்டுகளாக இணைப்புத் தாள் ஒட்டப்பட்டு வருகிறது. அதனால் தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகள் கிழிந்து போய் பழைய ஓலைச் சுவடி போல் உள்ளது.
இந்த ஆண்டாவது புதிய குடும்ப அட்டை வழங்கப்படுமா...?
தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள 2 கோடி குடும்ப அட்டைகளை மாற்றி புதிய அட்டை வழங்கப்பட வேண்டுமென்றால் அதற்கானப் பணியை ஜூலை மாதமே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் செப்டம்பர் இறுதி வரை அரசு எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. இதனால் அடுத்த ஆண்டும் புதிய அட்டை வழங்க வாய்ப்பில்லை என்று உணவுத் துறை அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரி கூறியது:
"தற்போது ஸ்மார்ட் கார்டு தயாரிக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்தப் பணி இன்னும் 2 மாதங்களில் நிறைவு பெறும்.
அரசு உத்தரவு கிடைத்தவுடன் இப் பணி தொடங்கப்படும். ஸ்மார்ட் கார்டு தாமதமானால் இந்த ஆண்டு கடைசியில் இணைப்புத் தாள் ஒட்டப்படும் நிலை ஏற்படும்' என்றார் அவர்.
சமூக ஆர்வலர் டென்னிஸ் தேவதாஸ் கூறியது:
"மக்களின் அவசியத் தேவையான குடும்ப அட்டையை கடந்த 10 ஆண்டுகளாக வழங்காமல் அரசு இழுத்தடிப்பது ஒரு அவலமான நிலை. வாக்காளர் அடையாள அட்டைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சரிபாதி கொடுத்தாலே புதிய குடும்ப அட்டையை காலாகாலத்தில் முறையாக வழங்கி விடலாம். இனியாவது அரசு விழித்துக் கொண்டு புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார் அவர்.