‘மாணவர்கள் ‘இன்டர்நெட்’, ‘மொபைல்’ களை தவறான வழியில் பயன்படுத்த கூடாது’, என பொறியாளர் தின கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
ஆர்.வி.எஸ்.,பொறியியல் கல்லூரியில் பொறியாளர் தின கருத்தரங்கு நடந்தது.
ஓய்வுபெற்ற குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் பேசியதாவது: இந்தியாவில் நீர் ஆதாரங்கள், கனிம வளங்கள் அதிகளவில் உள்ளன. சேமிக்கும் வசதி இல்லாததால் காஷ்மீரில் வெள்ளநீர் வீணாகி வருகிறது. பழைய நீர்த்தேக்கங்களை தூர்வாரி நீரை சேமிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 30 ஆயிரம் குளங்களை சீர்செய்ய வேண்டும். மழைநீர் செல்லக் கூடிய அளவிற்கு வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். நீண்ட கால திட்டங்களின் மூலம் நீர் ஆதாரங்களை பெருக்க வேண்டும். அப்போது தான் குடிநீர் தட்டுபாடு நீங்கும். விவசாயத்திற்கு தேவையான பாசன வசதி கிடைக்கும்.
வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நீர்வீழ்ச்சிகள் மூலம் நாட்டின் நீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். அரசு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பொறியியல்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். ‘இன்டர்நெட்,’ ‘மொபைல்’ களை தவறான வழியில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அவற்றை நல்ல வழியில் பயன்படுத்த முன்வர வேண்டும்.
புதிய கருவிகளை கண்டறிய வேண்டும். பொறியியல் துறையில் ஏராளமன பணி வாய்ப்புகள் உள்ளதால் பொறியியல் மாணவர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்,’ என்றார்.