சிறுவர்கள் கடத்தப்படுவதை தடுக்கவும், தகவல்களை ஒருங்கிணைத்து மீட்டு பணிகளை துரிதப்படுத்தவும், மத்திய அரசின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள, சைல்டு டிராக்கிங் சிஸ்டம் எனும் ஆன்லைன் இணையதள
வசதியில், பெற்றோர்களின் கவனத்துக்காக என குறிப்பிட்டு, பிரத்யேக பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், சிறார்கள் கடத்தப்படுவதை தடுக்க, ஆன்-லைனில் சைல்டு டிராக்கிங் சிஸ்டம் என்ற பெயரில் புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வழிப்பறி, பணம் கொள்ளை, பிச்சை எடுக்க வைத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சிறார்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம் என, வீட்டை விட்டு வெளியிடங்களுக்கு, தனியாக செல்லும் சிறார்கள், வீடு திரும்புவது கேள்விக்குறியாக உள்ளது.
இதை கட்டுப்படுத்தவும், சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மத்திய அரசின் சார்பில், மாநிலந்தோறும், காணாமல் போகும் சிறார்களின் விபரங்களை சேகரிக்க, சைல்டு டிராக்கிங் சிஸ்டம் எனும் ஆன்லைன் முறை உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தில், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள்தோறும், காப்பகங்களில் தங்கியுள்ள ஆதரவற்ற சிறார்களின் பெயர்கள், அடையாளம் உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் பதிவு செய்யப்படும்.
இதுதவிர, மாவட்ட வாரியாக, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் துறைகள், திட்டங்கள், அரசாணை என பல்வேறு விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதோடு, தினசரி காணாமல் போகும் சிறார்களின் எண்ணிக்கை, அடையாளம், புகைப்படம் ஆகியவையும், மீட்கப்படும் குழந்தைகளது எண்ணிக்கை, தங்க வைக்கப்பட்டுள்ள விபரங்களும், இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது.
இதுதவிர, பெற்றோர்களின் கவனத்துக்கு என பிரத்யேக பிரிவு வலைதளத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வீட்டில் குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம், குழந்தைகளை கண்காணிக்கும் நடைமுறை, அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க, செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வலைதள உபயோகத்தில் சிறுவர்களது பங்கு, உறவினர், அயலாரிடம் குழந்தைகள் பழகும் வரம்பு குறித்து கண்காணிப்பதற்கான நடைமுறை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
விபத்து மற்றும் அவசர காலங்களில், புகார் செய்ய வேண்டிய எண், மாவட்டந்தோறும் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக தொலைபேசி எண்கள், காவல்நிலை தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகவல்கள், நகரில் வசிக்கும் தனிக்குடித்தன பெற்றோர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இதை தினசரி நுாற்றுக்கணக்கனோர் பார்வையிடுவதாகவும், தற்போது வரை எட்டு லட்சம் பேர் பார்வையிட்டு தகவல்களை சேகரித்துள்ளதாகவும், வலைதள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மகளிர் மற்றும் குழந்தைகள் அமைச்சக திட்ட அதிகாரிகள் கூறுகையில், "நகர்புறங்களில் பல்வேறு காரணங்களால், பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றுவிடுகின்றன. குழந்தைகள் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் கவனம் குறையும் பட்சத்திலே, குற்றச்சம்பவங்கள் அரங்கேறுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இதற்கு வாய்ப்பளிக்காமல் இருப்பதற்காக, சைல்டு டிராக்கிங் சிஸ்டம் இணையதளத்தில், பெற்றோர்களுக்கான பிரத்யேக பிரிவு, பல்வேறு தகவல்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பார்வையிட ஏராளமானோர் ஆர்வம் செலுத்துகின்றனர். இதில், குழந்தைகளை பாதுகாக்கும் அலுவலக தொலைபேசி மற்றும் தொடர்பு முகவரி அளிக்கப்பட்டுள்ளதால், ஆபத்து காலங்களில் புகார்களை பதிவு செய்ய எளிமையாக இருக்கும்" என்றார்.