பெற்றோர் குழந்தைகளுக்கு பள்ளிப் பருவத்தில் இருந்தே தமிழ்மொழி மீது ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று, ஆட்சிமொழிக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
கோவை, அரசு கலைக் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்கில், 2012-ஆம் ஆண்டில் தமிழ் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோவை மாவட்ட நூலக அலுவலகத்திற்கு கேடயமும், 2012-ஆம் ஆண்டில் தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய அரசுப் பணியாளர் வி.கார்த்திகேயனுக்கு ரூ. 3,000 பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன.
இதில், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கா.மு.சேகர் பேசியது:
தாய்த்தமிழ் மொழியை தமிழர்கள் அனைவரும் அன்றாடம் அலுவலகத்திலும், பேச்சு வழக்கிலும் பிழையின்றிப் பேச வேண்டும்.தமிழ் மொழியில் கட்டாயம் அனைவரும் தங்களது கையெழுத்தை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வேண்டும். பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு பள்ளிப் பருவத்தில் இருந்தே தமிழ் மொழி மீது ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் டி.கிறிஸ்துராஜ் பேசுகையில், "அனைத்து அரசு அலுவலர்களும் தங்களது அலுவலகச் செயல்பாடுகளிலும் தங்களது சொந்தச் செயல்பாடுகளிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்த வேண்டும்' என்றார்.உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன் பேசுகையில், "தமிழர்கள் அனைவரும் ஆர்வத்துடன் தமிழைக் கற்க வேண்டும். பெற்றோர் குழந்தைகளிடையே தமிழ் கற்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ப.அன்புசெழியன், அரசுக் கலைக் கல்லூரி முதல்வர் குமரேசன், முதன்மை கல்வி அலுவலர் அ.ஞானகெளரி உள்பட பலர் பங்கேற்றனர்