ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் வகையில், அவற்றின் மீதான ஆய்வை ஒழுங்குபடுத்த தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) திட்டமிட்டுள்ளது. இதற்காக எந்தெந்த ஆய்வு நிறுவனங்கள் தங்களது கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்தன என்ற விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு என்சிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
ஆசிரியர் கல்வியிலும் தரத்தை உறுதி செய்வதற்காக மிகப் பெரிய சீர்திருத்தத்தை என்சிடிஇ மேற்கொண்டு வருகிறது. தரத்தை உறுதி செய்வதற்காக
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை விரைவில் வெளியிட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள் மீதான தொடர் ஆய்வை ஒழுங்குபடுத்த என்சிடிஇ திட்டமிட்டுள்ளது.
ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்களுக்கு, "தேசிய ஆய்வு, அங்கீகாரக் கவுன்சில் (நாக்)' போன்ற அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு ஆய்வு நிறுவனங்களால் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதுபோல் எந்தெந்த ஆய்வு நிறுவனங்களால் தங்களுடைய கல்வி நிறுவனம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது, கடைசியாக எந்த ஆய்வு நிறுவனத்தால் எப்போது ஆய்வு செய்யப்பட்டது என்பன உள்ளிட்ட விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்களையும் என்சிடிஇ அறிவுறுத்தியுள்ளது.SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...