வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை கண்காணிக்க 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைக் கண்காணிக்க, மூன்று மாவட்டங்களுக்கு தலா ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரியாகச் செயல்படும் ஆட்சியருடன் இணைந்து வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவர் என தலைமைத் தேர்தல் ஆணையம்
அறிவித்

துள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. நவம்பர் 10-ஆம் தேதி வரை இந்தப் பணிகள் நடைபெறும். இதனிடையே, மாவட்டந்தோறும் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைக் கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று மாவட்டங்களுக்கு ஒரு அதிகாரி என மொத்தம் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம்:

பூஜா குல்கர்னி (அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர்)-சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள்.

ஏ.சுகந்தி (தாட்கோ நிர்வாக இயக்குநர்)- விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர்.

சுதீப் ஜெயின் (தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை நிர்வாக இயக்குநர்)-தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம்.

ஏ.முகம்மது அஸ்லாம் (சிறுபான்மையினர் நலத் துறை ஆணையர்)-அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர்.

பி.அண்ணாமலை (நகர்ப்புற நல உச்சவரம்பு ஆணையாளர்)-நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்.

எம்.ஏ.சித்திக் (தொல்லியல்-தொல்பொருள் ஆய்வுத் துறை ஆணையாளர்)-நாமக்கல், கரூர், திண்டுக்கல்.

கா.பாலச்சந்திரன் (தமிழ்நாடு காதி-கிராம தொழில் வாரிய தலைமை நிர்வாக அலுவலர்)-கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு.

டி.என்.வெங்கடேஷ் (கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர்)-மதுரை, தேனி, விருதுநகர்.

கே.மணிவாசன் (மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆணையாளர்)-ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை.

சி.சமயமூர்த்தி-(வேலைவாய்ப்பு-பயிற்சித் துறை இயக்குநர்)-தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...