எபோலா கொடிய நோய் தாக்கம் ; இது வரை 10 ஆயிரம் பேர் பாதிப்பு

எபோலா நோய் தாக்கியவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்த மையம் தெரிவித்துள்ளது. மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில்
மருத்துவமனைகள் ஏற்கனவே எபோலா நோயாளிகளால் நிரம்பி வழிவதாகவும் அது தெரிவிக்கிறது. நியூயார்க்கில் ஒருவருக்கு எபோலா வந்ததாக செய்தி பரவியதால் அமெரிக்காவில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.


எபோலாவால் இதுவரையில் மொத்தம் 4 ஆயிரத்து 922 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவன அறிக்கை கூறுகிறது. இந்த உயிரிழப்புகளில் 10 தவிர மற்றவை அனைத்தும் எபோலாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மூன்று நாடுகளான சியர்ரா லியோன், லைபீரியா மற்றும் கினியாவில் நிகழ்ந்துள்ளன. இந்த மூன்று நாடுகளுக்கு வெளியில் எபோலாவாவல் உயிரிழப்பை சந்திக்க நேர்ந்துள்ள நாடுகளின் வரிசையில் தற்போது மாலியும் சேர்ந்துள்ளது. மாலியில் எபோலா வந்ததாக அறியப்பட்ட முதல் நபரான இரண்டு வயது குழந்தையொன்று இறந்துவிட்டதை மாலியின் வானொலி அறிவித்துள்ளது. இந்தக் குழந்தையின் உயிரிழப்பை அடுத்து அந்நாட்டில் பரவியுள்ள பீதியைத் தணிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டின் அதிபர் இப்ராகீம் பூப்கர் கூறியுள்ளார்.

அதேபோல மேற்கு ஆப்பிரிக்கவில் எபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உதவிவிட்டு நாடு திரும்பும் அமெரிக்கப் பிரஜைகள் அனைவரும் 21 நாட்கள் தனிமைப் படுத்தி வைக்கப்பட வேண்டும் என நியூயார்க் மற்றும் நியுஜெர்ஸி மாகாணங்களுக்கான கவர்னர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


கினியாவிலிருந்து நியூயார்க் திரும்பியிருந்த டாக்டர் கிரெய்க் ஸ்பென்சருக்கு எபோலா தொற்று ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தேச மக்களுக்கான தனது வாராந்த உரையில் எபோலாவை வீழ்த்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஏழு பேருக்கு எபோலா வந்திருந்தாலும், அவர்களில அனைவருமே நோயிலிருந்து மீண்டுவிட்டார்கள் எனவே முறையான மருத்துவ நடவடிக்கைகள், நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலமாக எபோலாவை வெற்றி பெற முடியும் என ஒபாமா கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...