ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதன்மைத் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்க அக்.15 கடைசி

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்பட குடிமைப் பணி முதன்மைத் தேர்வுப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் 15-ஆம் தேதி கடைசியாகும். இதற்கான அறிவிப்பை அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து, பயிற்சி மையத்தின் இயக்குநர் வெ.இறையன்பு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

முதன்மைத் தேர்வு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் சென்னை குமாரசாமி ராஜா சாலையில் அமைந்துள்ள குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் வரும் 12 முதல் 15-ஆம் தேதி வரை வழங்கப்படும்.

முதன்மைத் தேர்வுக்கான பயிற்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த 225 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் தவிர, இதர பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ-மாணவியர்களும், எந்தப் பயிற்சி மையத்திலும் சேராமல் தனியே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இந்தப் பயிற்சி மையத்தில் பயின்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் பயிற்சி வகுப்புகள் தொடங்கும். பயிற்சிக் காலத்தில் கட்டணம் இல்லாத விடுதி வசதி உண்டு.

மேலும், தமிழக அரசால் அனைத்து மாணவர்களுக்கும் மாதத்துக்கு ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மைய தொலைபேசி எண்கள்: 044-24261475, 24621909.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...