நடப்பாண்டில் வழங்கிய கல்விக்கடன் ரூ.170 கோடி! பெற்றோருக்கு தேவை விழிப்புணர்வு

நடப்பு கல்வியாண்டில், ஆக., மாதம் வரையிலான கணக்கெடுப்புபடி, ரூ.170 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் தவிர, பிற படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் கல்விக்கடன் கோருவதும் அதிகரித்துள்ளது.


பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களும், கல்வி தரத்தில் உயர வேண்டும் என எண்ணி, மத்திய அரசு 2005 ம் ஆண்டிலிருந்து கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கல்வியாண்டின் துவக்கத்தில், கடன் வழங்கும் பணியை வங்கிகள் துவங்குகின்றன. மருத்துவம், பொறியியல் மட்டுமின்றி, வேளாண், கலை மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட துறை, ஐ.டி.ஐ., வெளிநாட்டு படிப்பு, நர்சிங் என அனைத்து துறைகளுக்கும் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. திட்டம் துவங்கிய காலத்தில், பெரும்பாலும் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்பை தேர்வு செய்த மாணவர்கள் மட்டுமே கல்விக்கடன் பெற முன் வந்தனர். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கும் மாணவர்கள் அதிகளவில் கல்விக்கடன் பெற முன்வருகின்றனர் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு, நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கும் வங்கிகளில் கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான போதிய விழிப்புணர்வு, மாணவர்கள், பெற்றோர் மத்தியில் இல்லை என்கின்றனர், வங்கியாளர்கள். கோவை மாவட்டத்தில் கடந்த 2012 -2013ல் ரூ.120 கோடி, 2013 - 2014ல் ரூ.154 கோடி, நடப்பு கல்வியாண்டில் இதுவரை ரூ.170 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,' ஒவ்வொரு ஆண்டும் கல்விக்கடன் பெறுவோரின் எண்ணிக்கையும், கல்விக்கடன் வழங்கும் தொகையும் அதிகரித்து வருகிறது.''வாழ்க்கை தரத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டப்படி, தொழில் சார்ந்த படிப்புகளுக்கு மட்டுமல்லாது, பத்தாம் வகுப்பு முடித்து, பட்டய படிப்பை தேர்வு செய்வோருக்கும் கடன் வழங்கப்படுகிறது. ''நர்சிங், கலை, அறிவியல் உள்ளிட்ட துறையினை தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர்களுக்கும் கடன் வழங்கப்படும் என்பதற்கான விழிப்புணர்வு மாணவர்களிடையே, இன்னும் காணப்படுவதில்லை. மாணவர்கள், தாங்கள் பெறும் கடனை படித்து முடித்து ஒரு ஆண்டிற்குள் திருப்பி செலுத்த தொடங்க வேண்டும்,'' என்றார்.

வங்கி மேலாளர்கள் கூறுகையில், ''வங்கிகளில், அதிகரித்து வரும் கல்விக்கடன் தொகையால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். கடனை பெறும் மாணவர்கள் முறையாக படித்து முடித்ததும், அந்தந்த வங்கியை அணுகி, திருப்பி செலுத்துதல் வேண்டும். இம்முறையை அனைத்து மாணவர்களும் பின்பற்றினால் மட்டுமே, அடுத்து வரும் சந்ததியினருக்கு கல்விக்கடன் வழங்குவதில் சிக்கல் இருக்காது,'' என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...