20%போனஸ் வழங்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு !!!

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பொதுத்துறை
நிறுவனங்களான போக்குவரத்து, மின்வாரியம், கூட்டுறவு, சர்க்கரை ஆலை, நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் அரசு
ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் 3 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்


மேலும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் தகுதியுடைய ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸும், சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் வாரிய சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...