அக்டோபர் 24, 28, 31 தேதிகளில் சென்னை, நெல்லை, ஈரோடு மாவட்டங்களில் மின் கட்டண உயர்வு கருத்துக் கேட்புக் கூட்டம்

மின் கட்டண உயர்வு தொடர்பாக, சென்னை, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய இடங்களில் இம்மாதம் 24, 28, 31 ஆகிய தேதிகளில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளதாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வருவாய்க்கும், செலவுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையாக மின் கட்டண உயர்வை அறிவித்தது. வீடுகள், காட்டேஜ்கள், குறு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக ரீதியிலான மின் பயன்பாடு, தாற்காலிக மின் இணைப்புகள் என அனைத்துவிதமான இணைப்புகளுக்கும் சராசரியாக 15 சதவீதத்துக்கும் அதிகமாக உத்தேசக் கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்கள் வரும் 23-ஆம் தேதி வரை கருத்துகளைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உத்தேசக் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடத்த உள்ளது. இந்தக் கூட்டங்கள் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் இரண்டு அமர்வுகளாக நடைபெறும்.

கருத்துக் கேட்புக் கூட்டங்களின் விவரம்:

1. சென்னை - அக்டோபர் 24 (வெள்ளிக்கிழமை) - தமிழிசை சங்கம், ராஜா அண்ணாமலை மன்றம், உயர் நீதிமன்றம் அருகில், 5, எஸ்பிளனேடு சாலை, சென்னை - 600108.

2. திருநெல்வேலி - அக்டோபர் 28 (செவ்வாய்க்கிழமை)- டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அரங்கம், பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, 103, ஜி2, வடக்கு புறவழிச் சாலை, வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி-627003.

3. ஈரோடு - அக்டோபர் 31 (வெள்ளிக்கிழமை) - மல்லிகை அரங்கம், பழைய எண் 267, புதிய எண்.14, வீரபத்திர தெரு, பஸ் நிலையம், வ.உ.சி. பூங்கா அருகில், ஈரோடு - 638003.

இந்தக் கூட்டங்களில் பங்கேற்க காலை 9.30 மணி முதல் அந்தந்த அரங்குகளில் பொதுமக்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...