மன்னார் வளைகுடா அருகே உருவாகியுள்ள காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் வெள்ளிக்கிழமை (அக்.24) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தீபாவளி தினமான புதன்கிழமை மழை சற்று ஓய்ந்திருந்தது.
ஆனால், வியாழக்கிழமை காலையிலிருந்து பல இடங்களில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரியில் 110 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 100 மில்லி மீட்டரும் மழை பதிவானது.
சென்னையில் வியாழக்கிழமை மாலை வரை 30 மில்லி மீட்டர் மழை பெய்தது. இந்நிலையில், மன்னார் வளைகுடா பகுதியில் புதிதாக காற்று மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
இதன் காரணமாக, அடுத்த இரு நாள்களுக்கு தமிழகம் முழுவதும் தொடர் மழை இருக்கும் என்றும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை இருக்கும் என்றும் முன்னறிவிப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட அதிக அளவு பெய்யும் என்று வானிலை மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதை உறுதிப்படுத்தும் விதமாக மாநிலத்தின் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து, சாலைகள் அனைத்தும் வெள்ளக் காடாய் மாறியுள்ளது.