ஊரக பகுதிகளில் பயிலும் மாணவர்களின் திறனைக் கண்டறிய, ஊரக திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
ஒத்திவைப்பு: அந்த வகையில் தமிழகமெங்கும், கடந்த மாதம் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஊரக திறனாய்வுத் தேர்வு நடைபெறும் என கல்வித் துறை
அறிவித்திருந்தது. இதற்கான ஏற்பாடுகளை, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் செய்து வந்தனர். ஆனால், கடந்த மாதம் 27ம் தேதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்தது.
இதனால், தமிழகம் முழுவதும் நடைபெற்ற வன்முறை காரணமாக, தேர்வை அக்., 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும், ஊரக திறனாய்வுத் தேர்வு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்விற்கு, 2,687 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
2,032 மாணவர்கள்: நேற்று, காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில், மூன்று மையங்களிலும்; செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில், நான்கு மையங்கள் என, ஏழு மையங்களில் தேர்வு நடந்தது. இதில், 2,032 மாணவர்கள் மட்டும் தேர்வெழுதினர். 655 பேர் தேர்வெழுத வரவில்லை. இது, மொத்த மாணவர்களில் 25 சதவீதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது. 25 சதவீதம் மாணவர்கள் வராததற்கு, தேர்வு தேதியை மாற்றியது மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாதது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.