நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் சாந்தன் (வயது 4). தரங்கம்பாடியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் காமேஷ் (3). வேல் முருகன் வெளி நாட்டில் வேலை
பார்த்து வருகிறார். இதனால் காமேஷ் வெள்ளப்பள்ளத்தில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி இருந்தான்.
நேற்று மாலை 5 மணியளவில் சிறுவர்கள் 2 பேரும் அப் பகுதிக்கு விளையாட சென்றனர். கிராமப் புறத்தை ஒட்டி உள்ள பகுதியில் மணல் தோண்டிய பள்ளம் இருந்தது.
அதில் தற்போது பெய்த மழை நீர் தேங்கி இருந்தது. சிறுவர்கள் விளையாடிய போது தவறி மழை நீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்தனர். இதில் 2பேரும் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
. போலிசார் சிறுவர்களின் உடலை கைபற்றி நாகை அரசௌ மரௌஅத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மழை நீரில் மூழ்கி பலியான 2 சிறுவர்களின் உடல்களும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.அவர்களின் உடல்களுக்கு அமைச்சர் ஜெயபால், நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்