மருத்துவ கலந்தாய்வு முடிந்தும் 4 எம்.பி.பி.எஸ்., 15 பி.டி.எஸ்., இடங்கள் காலி

உரிய பிரிவுக்கான ஆட்கள் வராததால், மருத்துவ கலந்தாய்வு முடிந்தும், நான்கு, எம்.பி.பி.எஸ்., 15 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. மருத்துவ மாணவர் சேர்க்கை முடிந்து கல்லூரிகள் துவங்கி விட்டன. ஒதுக்கீடு பெற்றும் மாணவர்கள் சேராத, இடையில் விட்டுச்சென்ற 10 எம்.பி.பி.எஸ்., 115 பி.டி.எஸ்., இடங்களுக்கான கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
இதில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஆறு பேர் எம்.பி.பி.எஸ்., இடங்களையும், 103 பேர், பி.டி.எஸ்., இடங்களையும் தேர்வு செய்தனர். கலந்தாய்வு முடிந்தாலும், நான்கு, எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 15 பி.டி.எஸ்., இடங்களும் காலியாக உள்ளன. உரிய பிரிவுகளில் ஆட்கள் வராததால், சில இடங்கள் காலியாக உள்ளன. கலந்தாய்வு முடிந்துவிட்டது; மறு கலந்தாய்வுக்கு வாய்ப்பில்லை என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...