குரூப் -4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு குரூப் - 4ல் உள்ளடக்கிய பதவிகளுக்கு, இலவச முன்னோடி பயிற்சி வகுப்பு, வரும் 3ம் தேதி துவங்குகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் - 4ல்
உள்ளடங்கிய பதவிகளான இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய, 4,963 பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.

மேலும் விவரங்களை தமிழக அரசு பணியாளர் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வு டிச., 21 விண்ணப்பிக்க கடைசி நாள் நவ., 12. விண்ணப்பித்தவர்கள் விருப்பம் இருப்பின், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் இலவச முன்னோடி பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

பயிற்சி, நவ., 3ம் தேதி துவங்கி, டிச., 12ம் தேதி வரை நடைபெறும். போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பித்ததற்கான ஆதாரம், வேலைவாய்ப்பு பதிவட்டை நகல், இ- மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன், திருவள்ளூர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தெரிவித்து உள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...