7 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும்

தமிழக முதல்-அமைச்சருக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் கு.பால்பாண்டியன் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தற்போது 100 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள்.
கடந்த 1-ந் தேதி முதல் 7 சதவீத அகவிலைப்படி உயர்வினை மத்திய அரசு அறிவித்து, உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை மத்திய அரசு பணியாளர்கள் பெற்று வருகிறார்கள். ஆனால்மத்திய அரசுக்கு இணையாக, உயர்த்தப்பட்ட 7 சதவீத அகவிலைப்படியானது வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.

எனவே வரவுள்ள தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால செலவுகளை எதிர்கொள்ளும் வகையில் நிலுவையாக உள்ள 7 சதவீத அகவிலைப்படியை கடந்த 1-ந் தேதி முதல் கணக்கிட்டு வழங்கிட உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...