ஜெயலலிதாவை சிறையிலிருந்து விடுவிக்கக்கோரி, தனியார் மற்றும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகள், பள்ளிகள் நாளை (அக்., 7ம் தேதி) மூடப்படும் என்ற அறிவிப்பு ‘வாபஸ்’ பெறப்பட்டுள்ளது. எனவே, நாளை கல்லூரிகள், பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுவிக்கக்கோரி, தமிழகத்தில் உள்ள, பல அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
‘தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகள், பள்ளிகள், கல்வியியல் கல்லூரிகள் நாளை செயல்படாது’ என, அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு, சுயநிதி கல்லூரிகளின் சில அமைப்புகள் தங்களது போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளன.
இதனால், நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்.
