தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 53 லட்சத்து 54 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு 3-ஆவது செட் இலவசச் சீருடைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
காலாண்டுத் தேர்வு
விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கின.
1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்காக முப்பருவ முறையின் கீழ் இரண்டாம் பருவப் புத்தகங்கள், முதல் நாளான செவ்வாய்க்கிழமையே விநியோகம் செய்யப்பட்டன.
மொத்தம் 90 லட்சம் மாணவர்களுக்கு சுமார் 3 கோடி புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதோடு, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் சத்துணவு சாப்பிடும் 53 லட்சத்து 54 ஆயிரம் பேருக்கு மூன்றாவது செட் சீருடைகளும் வழங்கப்பட்டன. இந்த மாணவர்களுக்கு மொத்தம் 4 செட் சீருடைகள் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு செட் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக தள்ளிவைக்கப்பட்டன. அந்தத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. புதன்கிழமையும் இந்த வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.