ஓய்வூதியதாரரின் மருத்துவச் செலவுக்கான தொகையை இழப்பீட்டுடன் தர உத்தரவு

தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ நிதித் திட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் மருத்துவச் செலவுக்கான தொகையை அவருக்கு இழப்பீட்டுடன் தர வேண்டும் என ஓய்வூதியப் பிரிவு
இயக்குநருக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.பாலசுப்ரமணியன். சென்னை உயர்நீதிமன்றத்தில் துணை பதிவாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவருக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு அளிக்கப்பட்ட பல்வேறு மருத்துவச் சிகிச்சைகளுக்கு மொத்தம் ரூ.3.28 லட்சம் செலவாகி உள்ளது. அதில் ரூ.2 லட்சத்தை, தனியார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தில் பெற்றுள்ளார். மீதித் தொகையில், தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ நிதித் திட்டத்தின்கீழ் ரூ.99,492 யை பெற அவர் கோரி உள்ளார்.
விதிமுறைகளின்படி மருத்துவ நிதித் திட்டத்தின்கீழ் மீதித் தொகையை அவருக்கு வழங்க இயலாது என ஓய்வூதியப் பிரிவு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ரூ.99,492 யை, ரூ.50 ஆயிரம் நஷ்டஈடுடன் தர வேண்டும் எனக் கோரி பாலசுப்ரமணியன், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், மனுதாரர், தமக்கான மருத்துவச் செலவில் குறிப்பிட்ட தொகையை தனியார் காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளதை காரணம் காட்டி, மருத்துவ நிதித் திட்டத்தின்கீழ் அவருக்குச் சேர வேண்டிய தொகையைத் தர இயலாது என்று கூற ஓய்வூதியப் பிரிவு இயக்குநருக்கு அதிகாரம் இல்லை. எனவே அவர், மனுதாரருக்கு சேர வேண்டிய ரூ.99,492 கிடைக்க ஆவன செய்ய வேண்டும். மேலும் இழப்பீடாக ரூ.10,000-மும், வழக்கு செலவுக்காக ரூ.3,000-மும் அவருக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, நிதித் துறை (ஓய்வூதியம்) முதன்மைச் செயலர், ஓய்வூதியப் பிரிவு இயக்குநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மாநில நுகர்வோர் நீதிமன்றம், அந்த மனுவைத் தள்ளுபடி செய்து, மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...