அகவிலைப்படி உயர்வு: அரசு ஊழியர்,ஆசிரியர்கள் சங்கங்கள் நன்றி

தமிழக அரசு அறிவித்துள்ள 7 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு தலைமைச் செயலக சங்கம் உள்பட அரசு ஊழியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் பீட்டர்
அந்தோணிசாமி வெளியிட்ட அறிவிப்பு:

அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் என சுமார் 18 லட்சம் பேருக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தலைமைச் செயலக சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் பி.இளங்கோவன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.பால்பாண்டியன் ஆகியோரும் தமிழக அரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...