தொடர் மழை காரணமாக, என்.எல்.சி.,யில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் மின் சப்ளை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால், என்.எல்.சி., நிறுவனத்தின் மூன்று சுரங்கங்களிலும் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.சுரங்கங்களின் பங்கர் (நிலக்கரி சேமித்து வைக்கும் பகுதி) பகுதிகளில் இருந்த நிலக்கரியும் காலியாகி வருகிறது. கையிருப்பாக உள்ள நிலக்கரியும் மின் உற்பத்திக்கு பயன்படுத்த முடியாதவாறு அதிக ஈரத் தன்மையுடன் உள்ளது.இதனால், என்.எல்.சி.,யில் மின் உற்பத்தி வெகுவாக பாதித்துள்ளது. நேற்று மாலை 6:00 மணி நிலவரப்படி, தமிழகத்திற்கு மட்டுமே சப்ளை செய்யப்படும், முதல் அனல்மின் நிலையத்தில், 600 மெகாவாட் மின்சாரத்திற்கு பதிலாக 241 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டது.
மேலும், இந்த அனல் மின் நிலையத்தில் 4, 5, 6 மற்றும் 9ம் யூனிட்டுகளில் முழுைமயாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.420 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் 200 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கும், 2வது யூனிட்டில் முழுமையாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.இதேபோன்று, 1,470 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2ம் அனல்மின் நிலையத்தில் 602 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் உள்ள, தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 7 யூனிட்டுகளில் 2, 3 மற்றும் 7வது யூனிட்டில் மின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
என்.எல்.சி.,யில் உற்பத்தி செய்யப்படும் 2,490 மெகாவாட் மின்சாரத்தில் தற்போது 1,043 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், தமிழகம் , ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களும் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.என்.எல்.சி., மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் 250 மெகாவாட் மின்சாரத்திற்கு பதிலாக, நேற்று மாலை 6:00 மணி நிலவரப்படி 208 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.ஆனால் அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு மட்டுமே சப்ளை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மழைக் காலங்களில் என்.எல்.சி., அனல்மின் நிலைய உற்பத்தி பிரிவுகளில் உற்பத்தி நிறுத்தப்படுவதுடன், இது போன்ற கால கட்டங்களில் வருடாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருவது வழக்கமானது. எனவே, மின் உற்பத்தி குறைவுக்கும், வேலை நிறுத்தப் போராட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என, நிர்வாகம் தெரிவித்துள்ளது.