தூய்மை இந்தியா' திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்

பிரதமர் நரேந்திர மோடியின் "தூய்மை இந்தியா' திட்டத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆசிரியர்களை
தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கேட்டுக் கொண்டார்.

மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் பொன் விழாவில் சனிக்கிழமை அவர் பேசியது:

எந்தவொரு வளர்ச்சிக்கும் கல்வி அடிப்படையாக இருக்கிறது. சமுதாய மாற்றத்துக்கு வழிவகுக்கிறது. உண்மையான கல்வி என்பது மாணவர்களுக்கு அறிவைக் கொடுப்பதுடன், ஒழுக்கம், தன்னம்பிக்கை, படைப்பாற்றலை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.

சமூக மதிப்புகள் குறைந்துவரக்கூடிய இன்றைய சூழலில், தேசப்பற்றையும், மனிதநேயத்தையும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இவ் விஷயத்தில் கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியது அவசியமாக உள்ளது.

பரந்த மனப்பான்மை, சகிப்புத்தன்மை, ஆன்மிகச் சிந்தனை, தார்மீகப் பொறுப்புகள் ஆகியவற்றை மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் உணர்த்த வேண்டும்.

சிறந்த கல்வி என்பது அறிவு, படைப்பாற்றலை மட்டும் உள்ளடக்கியது அல்ல; அது மனிதநேயத்தையும், நல்லொழுக்கத்தையும் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியது குறிப்பிடத்தக்கது.

தெய்வ பக்திக்கு அடுத்த முக்கியத்துவத்தை தூய்மையாக இருப்பதற்கு கொடுக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி வலியுறுத்தினார். மாணவர்களுக்கான பொறுப்புகளைக் கற்றுக் கொடுக்கும்போது தூய்மையாக இருப்பதற்கும், நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதற்கும் அறிவுரை வழங்க வேண்டும்.

நாட்டை சுகாதாரமாகப் பராமரிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள "தூய்மை இந்தியா' திட்டத்தின் முக்கியத்தும் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒழுக்கமும், தூய்மையும் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும். இத்தகைய குடிமக்களை உருவாக்குவது கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களின் கையில் உள்ளது.

அதே நேரம், அர்ப்பணிப்பு, விடாமுயற்சியுடன் கல்வியைக் கற்றால் இலக்கை அடைவது எளிது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாளைய சமூகத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக் கூடியவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும் என்றார் ஆளுநர் கே.ரோசய்யா.

மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். லட்சுமி வித்யா சங்கம் தலைவர் ஷோபனா ராமச்சந்திரன் வரவேற்றார். டிவிஎஸ் பள்ளிகளின் இயக்குநர் ஆர்.ஸ்ரீனிவாசன் நன்றி கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...