சட்ட விரோதம்: தமிழகத்தில் அனுமதியின்றி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும், சட்ட விரோதமாக இயங்கும் இந்த பள்ளிகளை மூட, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், சென்னையைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி, விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் அங்கீகாரம் பெறாத மழலையர் பள்ளிகளில், அதிகாரிகள் ஆய்வுசெய்து, 2015 ஜனவரி 31ம் தேதிக்குள் அங்கீகாரம் தொடர்பாக, கல்வி அதிகாரிகள் இறுதி உத்தரவை பிறப்பிப்பார்கள் என்று, மாநில கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக்கல்வி இயக்குநர் பிறப்பித்த உத்தரவுகள் வருமாறு:
* அங்கீகாரமின்றி செயல்படும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு, செப்டம்பர் 14ம் தேதிக்குள் நோட்டீஸ் வழங்க வேண்டும்.
* அதற்கான விளக்கம் அல்லது விளக்கத்துடன் அங்கீகாரம் கோருவதற்கான கருத்துரு ஆகியன அக்டோபர் 15ம் தேதிக்குள் பெறப்பட வேண்டும்.
* சம்பந்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், அங்கீகாரமில்லாத பள்ளிகளுக்கு நவம்பர் 30ம் தேதிக்குள் சென்று, ஆய்வு நடத்த வேண்டும்.
* ஆய்வு நடத்தப்பட்ட பின்னர், அங்கீகாரம் வழங்க தகுதியான பள்ளிகளுக்கு, 2015ம் ஆண்டு ஜனவரி 31க்குள் அங்கீகாரம் வழங்க வேண்டும். அல்லது தகுதியில்லாத பள்ளிகளை இழுத்து மூட வேண்டும். இவ்வாறு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், பிளே ஸ்கூல், கிண்டர் கார்டன் ஸ்கூல் என 326 மழலையர் பள்ளிகள் உள்ளன. இதில் அனுமதிபெறாத 197 பள்ளிகளுக்கு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் சார்பில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மூடப்படும்: நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 197 பள்ளிகள், வரும் 15ம் தேதிக்குள் விளக்கம் அல்லது விளக்கத்துடன் அங்கீகாரம் கோருவதற்கான கருத்துரு ஆகியவற்றை அனுப்ப வேண்டும். இதில் பெரும்பாலான பள்ளிகள் விளக்கத்துடன் அங்கீகாரம் கோருவதற்கான கருத்துருக்களை அனுப்பி வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், வரும் 16ம் தேதி முதல் 197 பள்ளிகளிலும், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு நடத்த உள்ளனர். தகுதி இல்லாத மற்றும் அங்கீகாரம் கோராத பள்ளிகளுக்கு, சீல் வைக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று தொடக்கக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.