அரபிக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.
வங்கக் கடலில் கடந்த சில நாள்களுக்கு
முன்பு உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த 4 நாள்களாக மழை பெய்து வந்தது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை பலவீனமடைந்ததை அடுத்து தமிழகத்தில் மழை நிற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியது: வங்கக் கடலில் தமிழக-இலங்கைக் கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை முற்றிலும் மறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மழையின் குறைந்துள்ளது.
ஆனால், தென்கிழக்கு அரபிக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வங்கக் கடலில் இருந்து ஈரப்பதமான காற்றை இழுக்கும். அவ்வாறு ஈர்க்கும்போது, அந்தக் காற்று தமிழக நிலப்பகுதி வழியாகச் செல்லும். இதனால் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் புதன்கிழமையும் மழை பெய்யும்.
அதேவேளையில், செவ்வாய்க்கிழமை காலை வரையிலான நிலவரப்படி பழனியில் 200 மி.மீ. மழையும், சத்திரப்பட்டியில் 150 மி.மீ. மழையும் பதிவானது. மயிலாடுதுறையில் 120 மி.மீ., குடவாசலில் 110 மி.மீ., ஒட்டப்பிடாரத்தில் 100 மி.மீ. சென்னையில் 30 மி.மீ. மழை பதிவானது என்றார் அவர்.
சராசரிக்கு மேல் வடகிழக்குப் பருவமழை
இந்த ஆண்டு தமிழகத்தில் சராசரி அளவுக்கு மேல் வடகிழக்குப் பருவமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் எல்.எஸ். ரத்தோர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சராசரி அல்லது சராசரிக்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 19 சதவீதம் வரை கூடுதல் மழை பெய்யலாம். வடகிழக்குப் பருவமழையின்போது சராசரியாக 332 மி.மீ. மழை பெய்யும். தமிழகத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், 438 மி.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழையும் சராசரியாக இருந்தது. கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது 33 சதவீதம் குறைவான மழை பெய்தது என்றார் அவர்.