நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சபீதா நேரில் ஆஜர்

தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜரானார்.


 இது தொடர்பாக பல ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரந்தனர். அதில், 2011-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, நீண்ட காலம் பணி புரியும் ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கவேண்டும்.

 ஆனால், சிறப்பு நிலை அந்தஸ்து சில ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அதனால், சிறப்பு நிலை அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.

 அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீண்ட காலம் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அந்தஸ்து வழங்க பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டது.

  ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி அனைவருக்கும் சிறப்பு நிலை அந்தஸ்து வழங்காமல் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத தமிழக பள்ளிக் கல்வித்துறைச் செயலர் டி.சபீதா உள்பட அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

 இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது பள்ளிக் கல்வித்துறை செயலரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை நடந்தது. விசாரணையின்போது, பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சபீதா நேரில் ஆஜரானார்.

  அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞர் ஆஜராகி, நீண்ட காலம் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கியதாகத் தெரிவித்தார்.

அப்போது, செயலர் சபீதாவிடம் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற கால அவகாசம் கோரலாம் அல்லது உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

 அதை செய்யாததால்தான் இது போன்ற வழக்குகள் நீதிமன்றத்துக்கு வருகின்றன எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.,

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...