இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டில் பல இயக்கங்கள் பல இலட்சம் ஆசிரியர்களை ஒன்று திரட்டி பல கட்ட போராட்டம் நடத்தி ,ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை தான் தற்போது உள்ளது.நமக்கு இருக்கும் ஓரே வழி நீதிமன்றம் தான்!!!!
நீதி மன்றம் ஏன் செல்கிறோம்??? நமக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு பேசி தீர்க்க முடியாத சூழ்நிலையில் நாம் நீதி மன்றத்தை நாடுவோம் !!அப்போது வழக்கு தொடுத்தவர் வாதியாகவும் நமக்கு யாரிடம் பரிகாரம் வேண்டுகிறோமோ ,அவர் பிரதிவாதிகள் ஆகவும் சேர்க்கப்படுகின்றனர்,வழக்கை தொடுத்தவர் மற்றும் பிரதிவாதி இருவரும் அவர்கள் தரப்பு வாதத்தையும் ஒரு நபர் நீதி மன்றத்தில் பதிவிடுவர்.வழக்கை தொடுப்பவர் ௯றும் குற்றச்சாட்டுகளுக்கு பிரதிவாதி பதில் மனு (Counder File) தாக்கல் செய்ய வேண்டும் இதில் இருதரப்பு வாதத்தையும் கேட்க (அதிக வழக்கு தேக்கம் காரணமாக) சில மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகும்,பின்னர் இருதரப்பினரும் இறுதி வாதத்தை பதிவு செய்ய ஏதேனும் ஒருநாள் குறிக்கப்பட்டு அன்று இருதரப்பு வழக்கறிஞர்களும் பங்கு பெற்று இறுதி கட்ட விசாரணை (Final Hearing ) நடைபெறும் ,அதன் பின்னர் நீதியரசர் இருதரப்பினரிடம் உள்ள ஆவணங்களை கொண்டு இறுதி தீர்ப்பினை (Final Judument ) வழங்குவார்,இதுதான் சாதாரணமாக உள்ள நடைமுறை இதற்கு சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் ஆகும்.தீர்ப்பினை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டால் வழக்கு முடிவுக்கு வரும்,ஆனால் வாதியோ அல்லது பிரதிவாதியோ" ஏற்று கொள்ளவில்லை"(அமல்படுத்தவில்லை ) எனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கலாம் (Condam) அல்லது மேல் முறையீட்டுக்கு இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வுக்கு வழக்கினை கொண்டு செல்லலாம்!!!(ஒரு நபர் நீதி மன்றத்தில் வழக்கிற்கு அரசு பதில் மனு தாக்கல் செய்துவிட்டால் விரைவாக மேல் முறையீட்டில் முடிந்துவிடும் )அங்கேயும் இதே போல நடைமுறை பின்பற்றபட்டு அதிலும் தீர்க்கப்படாவிட்டால் உச்ச நீதி மன்றத்தினை நாடலாம் (உச்ச நீதி மன்றத்தில் குறைந்த பட்சம் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தான் )நமது நாட்டின் நீதி துறையின் நடைமுறை இதுதான் !!!விடாமுயற்சிகள் மேற்கொண்டால் ஓரிரு வருடங்களுக்கு உள்ளாக இதனை முடித்துவிடலாம்.நண்பர்களே இது சிலருக்கு ஏற்று கொள்ள முடியாமல் கசப்பான செய்தியாக இருக்கலாம்,உண்மை இதுவே !!!! விபரம் அறிந்தவர்களிடம் இதுபற்றி கேட்டு அறிந்து கொள்ளுங்கள்,,நமது ஊதிய வழக்கில் என்ன நடந்தது ??? இனி என்ன நடக்கும் ??? இதுகுறித்து முழுவிபரத்துடன் அனைவருக்கும் எளிதில் அறியும் வண்ணம் விளக்கங்கள் உடன் விரைவில் என்றும் ஆசிரியர்களுக்கான SSTA. உண்மையை சொல்லுவோம்!!!!சொல்வதை செய்வோம் !!!!
.jpg)