உளவியல் ஆலோசனை மையங்களை அதிகம் நாடும் பள்ளி மாணவிகள்

: பள்ளிகளில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும், தற்கொலை எண்ணங்களுக்கு தீர்வுகாணும் விதத்திலும், கொண்டு வரப்பட்ட நடமாடும் உளவியல் ஆலோசனை மையத்தை, அதிகம் நாடுவது மாணவிகளே என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.


பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கு இருக்கும் மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகாண, கடந்தாண்டு நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் உருவாக்கப்பட்டது. இதில், கல்வி மாவட்டங்களை இணைத்து, 10 மண்டலங்களில் உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகள்தோறும் மாணவர்களை சந்திப்பது, அவர்களது பிரச்னைகள் பதிவு செய்வது, ஆசிரியர்களுக்கு பயிற்சி எடுப்பது என, உளவியல் ஆலோசகர்களுக்கான பணி வரன்முறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கோவை மண்டலத்தை பொறுத்தவரை, கோவை, ஊட்டி, திருப்பூர் என மூன்று மாவட்டங்களுக்கு, ஒரு உளவியல் ஆலோசனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் ஆய்வுப்படி, நடப்பு கல்வியாண்டில், 29 பள்ளிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங்கும், நுாற்றுக்கணக்கானோருக்கு, தனிப்பட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இம்மையத்தை நாடி வருவோரில், மாணவர்களை விட, மாணவிகளே அதிக எண்ணிக்கையில் இருப்பது, புள்ளிவிபரங்கள் வாயிலாக அறியமுடிகிறது. இதிலும், பதின்ம வயது மாணவிகளே அதிகம். பாலியல் சீண்டல்கள், பருவ மாறுபாடு, உடலியல் சார்ந்த பிரச்னைகள் என, மாணவிகள் மத்தியில் முன்வைக்கும் பிரச்னைகள் ஏராளம். ஆனால், மாணவர்களுக்கு, காதல், நட்பு ரீதியான பிரச்னைகளுக்கு மட்டுமே, ஆலோசனைக்கு வந்துள்ளனர்.

இப்பாதிப்புகள் குறித்து, பெற்றோர்களிடமும் சொல்ல முடியாமல், நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமல் தவிப்பது, வாக்குமூலத்தின் வாயிலாக அறிய முடிகிறது. சில இடங்களில், பெற்றோர்களது அளவுக்கதிகமான கண்டிப்பால், இடைநிற்றலை தழுவ வேண்டி வருமோ என்ற அச்சத்தில், வெளி வட்டாரங்களில் நடக்கும் பிரச்னைகளை, வீட்டில் பகிர்வது குறைந்து வருகிறது; சில பெற்றோர்களுக்கு, குழந்தைகள் சொல்வதை கேட்ககூட நேரமில்லை என, புறக்கணிப்பதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற மனநிலைகளால், அதீத மன அழுத்தத்திற்கு ஆட்படும் மாணவிகள், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். இம்மாதிரியான பிரச்னைகளை சந்திக்கும் மாணவிகளுக்கு, பிரத்யேக ஆலோசனை வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாணவியர் விபரம், பெற்றோர்களது தொடர்பு எண் என, பல்வேறு தகவல்கள் திரட்டப்படுகின்றன. தவிர, குறிப்பிட்ட மாணவிகளை கண்காணிக்க, வகுப்பாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுவதால், தற்கொலை எண்ணங்கள் குறைவதாக கூறப்படுகிறது.

கல்வியாளர்கள் சிலர் கூறுகையில், "குறிப்பிட்ட வயதை அடையும் பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர்களது அரவணைப்பு அவசியம். ஏனெனில், பெரும்பாலான பாலியல் தொடர்பான சீண்டல், தெரிந்த நபர்களாலே ஏற்படுவதாக ஆய்வு கூறுகிறது. குழந்தைகளிடம் மனம்விட்டு பேசும் நடைமுறை மறைந்து கொண்டு வருகிறது. இதனால், தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களது எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.

மாநிலம் முழுவதும் 2009- 2014 ஆகஸ்ட் வரை, 2449 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில், சென்னையில் 363 மாணவர்கள், அடுத்தபடியாக கோவையில் 153 பேர் என, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதை கட்டுப்படுத்துவதற்கான தீர்வு, ஆசிரியர்கள், பெற்றோர்கள் என, இருதரப்பினரது ஒத்துழைப்பிலே இருக்கிறது" என்றனர்.

மாற்றம் தெரிகிறது

உளவியல் ஆலோசகர் அருள்வடிவு கூறுகையில், "வயது மாற்றத்தால், கற்பனை, சிந்தனைகள், சினிமா தாக்கம் அதிகம் மாணவர்களிடத்தில் உள்ளது. காதல், நட்பு என, சினிமாத்தனமான வசனங்களால், அதிகம் பாதிக்கப்படுவது ஒன்பதாம் மற்றும் பிளஸ் 1 மாணவர்களே. 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, கல்வியின் முக்கியத்துவம் குறித்த பயம் உள்ளது. குறிப்பாக, மாணவிகளுக்கான பிரச்னைகளே ஏராளம். பாலியல் தொடர்பான பிரச்னைகளுக்கே அதிகம் ஆலோசனை வழங்கப்படுகிறது. தொடர் ஆலோசனை மற்றும் கண்காணிப்பால், மாணவிகளிடத்தில் அதிக மாற்றம் தெரிகிறது" என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...