டீசல் விலை லிட்டருக்கு ரூ.3-ம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1-ம் குறைய வாய்ப்பு உள்ளதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அக்டோபர் 15-ம் தேதி நடைபெறும் மகாராஷ்டிரம், ஹரியாணா சட்டசபை தேர்தலுக்குப் பிறகு இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. அதற்கேற்ப இந்திய சந்தையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.