பருவமழை தீவிரமடைந்துள்ளதால், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவ வாய்ப்புள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மழைக் காலங்களில் வாந்தி, வயிற்றுப்போக்கு, காலரா, மலேரியா, மஞ்சள்காமாலை, சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன.
தமிழகத்தைப் பொருத்தவரை விழுப்புரம், சிவகங்கை, சென்னை ஆகிய இடங்களில் மொத்தம் மூன்று பேர் மர்மக் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.
தீவிர நடவடிக்கை: தமிழகத்தில் இதுபோன்ற தொற்று நோய்களைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவாமல் தடுப்பதற்காக, தமிழகம் முழுவதும் சுகாதாரப் பணிகளில் கூடுதலாக சுமார் 20 ஆயிரம் தாற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட சில கடற்கரை மாவட்டங்களில் காலரா பாதிப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சென்னை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலரா பாதிப்புகள் உள்ளன. அந்தப் பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெங்கு, சிக்குன்குனியா ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு சிலர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது:
தமிழகத்தில் டெங்கு, காலரா, சிக்குன்குனியா ஆகிய நோய்கள் ஒரு சில இடங்களில் பரவியுள்ளன. ஆனால், எங்கும் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த நோய் பாதிப்பு சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் மூன்று உயிரிழப்புகளைத் தவிர வேறு உயிரிழப்புகள் ஏற்படவில்லை. மழைக் காலம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
ஆண்டு முழுவதும் கண்காணிப்பு: மழை காலங்களில் போர்க்கால அடிப்படையில் நோய் தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பொது சுகாதாரத் துறை மேற்கொள்வது வாடிக்கை. அதனைத் தவிர்த்து, ஆண்டு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், மழைக் காலங்கள் தவிர்த்து, மற்ற நேரங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கொசுக்கள் பரவாமல் தடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.