அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணை தேதி, தள்ளி போனதால், பள்ளி திறக்கப்படும் தேதியும், தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா, ஜாமின் மனு மீதான விசாரணை, 1ம் தேதியான நேற்று முன்தினம் எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கை விசாரிக்க மறுத்து, 7ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஒத்தி வைத்தார்.
தமிழகத்தில், பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை, செப்., 27ம் தேதி துவங்கி, அக்.,5ம் தேதி வரை விடப்பட்டுள்ளது. வரும், 6ம் தேதி, பள்ளி வழக்கம் போல் திறந்து செயல்படும், என, அறிவிக்கப்பட்டு உள்ளது. உள்ளாட்சி தேர்தலால், காலாண்டு தேர்வில் ஒத்திவைக்கப்பட்ட பாடங்களுக்கு, 7, 8ம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று, பள்ளி கல்வி துறை அறிவித்து இருந்தது. இதற்கிடையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பால், ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரது ஜாமின் மனு, 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அவருக்கு,அன்று ஜாமின் கிடைக்குமா என்ற விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையில், பள்ளி, 7ம் தேதி திறக்கப்படுமா, விடுபட்ட தேர்வு, 7 முதல் நடக்குமா, 7ம் தேதி ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணையில் குளறுபடி ஏற்பட்டால், தொடர்ந்து பள்ளி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 6ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் பள்ளிக்கு விடுமுறை.
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டது முதல், தமிழகத்தில் கடையடைப்பு, வேலை நிறுத்தம், உண்ணாவிரதம், பிற மாநில பஸ்கள் நிறுத்தம், உருவ பொம்மை எரிப்பு என, அசாதாரண சூழல் நிலவு கிறது. எனவே, பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகள் திறப்பு குறித்து முறையான அறிவிப்பை மீண்டும் வெளியிட வேண்டுமென, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். கல்வி துறை அதிகாரிகள் கூறும் போது, 'காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின், 7ம் தேதி, திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். பள்ளி திறக்கும் தேதியை தள்ளி வைப்பது குறித்து, எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. பள்ளி கல்வி துறை தான், இதை முடிவு செய்து, அறிவிக்கும்' என்றனர். SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...