அமைச்சர்களே....கழிவறையை கழுவுங்கள்: மோடி அதிரடி

காந்தி ஜெயந்தி அன்று அக்டோபர் 3ம் திகதி அமைச்சர்களும், அதிகாரிகளும் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
www.sstaweb.com
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, காந்திஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் திகதியன்று சுத்தமான இந்தியா என்ற திட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். காந்தியின் 150வது பிறந்த தினத்தையொட்டி, சுத்தமான இந்தியா என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கும் வகையில் அனைத்து துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் அன்றைய தினம் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் பெருகி வரும் மக்கள் நெருக்கம் காரணமாக கட்டுக்கடங்காத வகையில் குப்பைகள் பெருகி வருகின்றன. மேலும், இந்தியாவில் போதிய சுகாதார வசதியில்லாத காரணத்தால் ஏற்படும் நோய்கள் காரணமாக ஏராளமானோர் உயிரிழப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே, இந்த புதிய விழிப்புணர்வு பிரசார திட்டத்தை மத்திய அரசு தொடக்கியுள்ளது. இதுகுறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், துடைப்பம் உள்ளிட்ட கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. அன்றைய தினம், நாங்கள் குளியலறை, கழிவறைகளை சுத்தம் செய்ய உள்ளோம் என்று கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...