10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள்அமைக்க டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கு, புதிய மையங்கள் அமைப்பது தொடர்பான பரிந்துரைகளை, மாவட்ட கல்வி அலுவலர்கள்,
வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, தமிழக தேர்வுத் துறை அறிவுறுத்திஉள்ளது.
அடுத்தாண்டு மார்ச், ஏப்ரலில், 10ம் வகுப்புக்கு, அரசு பொதுத்தேர்வு நடத்துவதற்கான பணி துவங்கி உள்ளது. இந்தத் தேர்வை நடத்த, கல்வி மாவட்டம் வாரியாக, புதிதாக தேர்வு மையங்கள் அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.புதிய மையங்கள் அமைப்பதற்கான பரிந்துரையை, மாவட்ட கல்வி அலுவலர்கள், வரும் 30ம் தேதிக்குள், சென்னையில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்து உள்ளார்.
கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப, புதிய தேர்வு மையங்கள் அமைக்க வேண்டியுள்ளது. அதற்காக, 150 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுவதற்கு வசதியாக, காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர், கழிப்பறை வசதியுடைய பள்ளிகள், தேர்வு செய்யப்பட்டு, பரிந்துரைக்கப்பட உள்ளன என்றார்.