வன்கொடுமை என்றால் என்ன? மதிப்பெண் தளர்வு வழங்கியது சரியா???

5%மதிப்பெண் தளர்வு வழங்கியது பற்றி மற்றவர்கள் எதிராக சொல்லும் போது, இது சமூக நீதிக்கு எதிரானது என்றும்,வன்கொடுமைசட்டம் பாயும் என்றும் சில நன்பர்கள் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் நீதிமன்றமே இது சமூக நீதிக்கு எதிரானது அல்ல என்று கூறியுள்ளது.

வன்கொடுமை என்றால் என்ன?

வன்கொடுமை என்பது நாம் ஜனநாயகத்தைப் பெயரளவில் ஏற்றுக்கொண்டுள்ள ஒரு ஜாதிய சமூகம், ஜனநாயகத்தை அனுபவிக்க வேண்டுமென்றால், பாராமை, அனுகாமை, தீண்டாமை, ஜாதிய பாகுபாடுகள். ஜாதி, வர்ண உணர்வுகளின் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும், அவற்றை ஜனநாயக உணர்வோடு கடக்கவேண்டும். இந்த கூற்று படி பார்த்தால்,வன்கொடுமை என்பது இப்போது வறுமையில் வாடும் முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே நடப்பதாகவே தோன்றுகிறது.முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் அனைவரும் செல்வந்தர்களாகவே இருக்கிறார்கள் என்றும் அதில் ஒருவர்கூட வறுமையில் இல்லை என்றும் தவறாக இந்திய அரசு கணித்துவிட்டது தான் கொடுமையிலும் கொடுமை. அதற்க்கு இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மிக பெரிய பங்கு உண்டு.

ஏனெனில் இட ஒதிக்கிட்டாளர்களின் வாக்கு வங்கியே, அரசியல்வாதிகளுக்கு முக்கியமாகப்பட்டதே அல்லாமல் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டதாக தெரியவில்லை.வறுமையில் வாடும் முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களின் தினசரி வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிடாதா?. இதே நிலைமை நீடித்தால் அவர்களை ஒடுக்கப்பட்டவர்களாகவே இந்த சமுதாயம் அவர்களை ஒதுக்கிவிடாதா?.

மண்டல் ஆணைக்குழு, மற்ற வகுப்பை சார்ந்தவர்களுக்கு, அந்தந்த பிரிவினரின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு பரிந்துரை செய்ய 1979 ஆம் ஆண்டு முன்வந்த போது,வறுமையில் வாடும் முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களுக்கும்இட ஒதுக்கீடு பரிந்துரை செய்ய வேண்டும் என்பதுஅவர்கள் நினைவிற்க்கு வரவில்லையா?இதுமண்டல் ஆணைக்குழுவின் பணியில்லை என்று அப்போதைய அரசு எண்ணியிருந்தால், 1979லிருந்து இன்று வரை ஆட்சி அமைத்த எந்த அரசுமுற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் வாழும் மக்களின் பிரச்னைகளை ஆராயஆணையங்கள் அமைத்திருக்க வேண்டாமா??.

நலிவடைந்த பிரிவினருக்கு 50% மிகாமல் இட ஒதுக்கீடு கட்டாயம் ஒதுக்க வேண்டுமென்று மாநில அரசுக்களை மத்திய அரசு அறிவுறுத்திய போது, நமது மாநிலஅரசு புதிய சட்டத்தை இயற்றி சரத் 9கீழ் மக்கள் தொகையின் கணக்கின் படி நலிவடைந்த பிரிவினருக்கு 69% ஒதுக்கீடு செய்கிறோம் என்று புதிய சட்ட இணைப்பை ஏற்படுத்தி நலிவடைந்த பிரிவினரின் வாழ்க்கை தரம் உயர வழி வகுத்து கொடுத்தது.இதேபோல் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட மீதமுள்ள 31%-ல் ஒரு குறிப்பிட்டசதவிகிதம் இவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு செய்து கொடுத்தால் இவர்களும் பயன் அடைவார்கள்.இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 14-ல் இந்த தேசத்தில் வாழும் அனைவரும் சட்டத்தின் முன் சமம்.(14. The State shall not deny to any person equalitybefore the law or the equal protection of the laws within theterritory of India)என்றிருக்கும்போது,இவர்களும் இந்த நாட்டின் குடிமக்களே, இவர்களின் உரிமையை மட்டும் பரிப்பதில் என்ன நியாயம்??. எங்கே சமத்துவம் ஓங்கி உள்ளது??.

சுயநலத்தின் உச்சியில் இருக்கும் எந்த அரசியல் கட்சியும் இவர்களின் குறைகளை தீர்க்க முன் வராது என்பதுஉண்மை.இவர்களுக்கு ஏறப்படும் அநீதியும் ஒருவகைபாராமை, அனுகாமை,தீண்டாமை தானே. இந்த வன்கொடுமையை ஒழிக்க இன்னுமொரு பெரியார் வரவேண்டுமென்று விழி பிதுங்கி, வழி தேடிகாத்துக்கொண்டிருக்கும் இன்னுமொரு நலிவடைந்த பிரிவினர்.

இவன்
A ALEXANDER SOLOMON

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...