காணாமல் போனவர்களைக் கண்டறிய ஐ.ஜி. தலைமையில் சிறப்புப் படை அமைப்பது உள்ளிட்ட புதிய வழிமுறைகளைப் பின்பற்றுமாறு, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தஞ்சாவூரைச் சேர்ந்த சுபேதா பேகம், நெல்லையைச் சேர்ந்த தருமாó, திண்டுக்கல்லைச் சேர்ந்த
வெள்ளைச்சாமி ஆகியோர் காணாமல்போன தங்களது உறவினர்களைக் கண்டறிய உத்தரவிடுமாறு கோரி மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களில், காணாமல் போனவர்களைக் கண்டறிய முறையான விசாரணை நடத்துவதில்லை. மேலும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில்லை என காவல் துறை மீது குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு, காணாமல் போனவர்களைக் கண்டறிய போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், தமிழக அரசு பின்வரும் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டனர்.
அதன் விவரம்: காணாமல் போனவர்கள் பற்றிய குறிப்புகளை உள்ளூர் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்த வேண்டும். காணாமல் போனவர்கள் விவரங்களை தேசிய குற்ற ஆவணப் பிரிவுக்கு உடனுக்குடன் அனுப்ப வேண்டும். சம்பந்தப்பட்ட சரகங்களில் டி.எஸ்.பி. அளவிலான அதிகாரிகளை இதற்கென நியமிக்க வேண்டும்.
காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைத் தெரிவிக்க வேண்டிய நபர், தொலைபேசி எண், இ-மெயில் முகவரிகளை வெளியிட வேண்டும். ஆள் கடத்தல் குற்றங்களில் ஈடுபடுவோரின் புகைப்படங்களை சினிமா திரையரங்குகளில் காண்பிப்பதை கண்டிப்பாக்க வேண்டும்.
தமிழக அளவில் ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழுவினர் மற்ற மாநில காவல் துறையுடன் தொடர்பு கொண்டு விவரங்களைப் பரிமாற வேண்டும். ஒவ்வொரு அதிகாரியும் காணாமல் போனவர் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும்.
காணாமல் போனவர்கள் விவரத்தை வெளியிட தனி இணைய தளத்தை காவல் துறை உருவாக்க வேண்டும். அனைத்து மாநில காவல் துறை இணைய தளங்களுடன் அதை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும். காணாமல் போனவர்களைக் கண்டறிய நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் முறை குறித்து காவல் துறை அதிகாரிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை பயிற்சி அளிக்க வேண்டும்.
குற்றங்களில் ஈடுபடுவோர் செல்போன்களில் பேசிய தகவல்களை சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்கள் தெரிவிக்க மறுப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் காவல் துறைக்கு உரிய தகவல்களை அளிக்க வேண்டியது செல்போன் நிறுவனங்களின் கடமையாகும். செல்போன் நிறுவனங்களுடன் இதுதொடர்பாக பேசி தகவல் அளிப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அரசின் துறைகள் ஒருங்கிணைந்து இதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிந்துரைகளை நிறைவேற்றியது தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.