இன்று SSTA சார்பாக தொடுத்த இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு (WP10546/14)இறுதி விசாரணை பட்டியலில் இன்று 15.10.2014 ல் இடம் பெற்றது.முதலில் என்ற 55 வழக்கு வந்து பின்னர் இறுதி விசாரணை வழக்கு எடுத்து கொள்ளப்பட்டு 29 வழக்கு
விசாரணை வரும் பொழுது நீதிமன்ற நேரம் முடிவடைந்தது ,நமது வழக்கு வரிசை எண்; 38 ல் இடம் பெற்றது எனவே இன்று நமது வழக்கு விசாரணைக்கு எட்டப்படவில்லை.ஒரு முறை வழக்கு இறுதி விசாரணை பட்டியலில் இடம் பெற்றுவிட்டால் தொடர்ந்து இறுதி விசாரணை பட்டியலில் மட்டுமே இடம் பெறும் இறுதி விசாரணை வழக்கு அனைத்தும் புதன்கிழமை மட்டுமே சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 22.10.2014 அன்று தீபாவளி விடுமுறை எனவே நமது வழக்கு 29.10.14 அன்று அடுத்து விசாரணைக்கு வரும் .விரைவில் வெற்றி பெற்று இழந்த ஊதியத்தை பெற்றே தீருவோம்!!!