சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியத்தில் மொத்தம் 101 தொடக்க/நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகளில் சுமார் நானூறுக்கும் மேற்பட்ட இடைநிலை,பட்டதாரி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியாற்றி
வருகின்றனர்.ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் விடுபட்ட பதிவுகள் இருப்பது நமது SSTA. இயக்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.அவற்றில் BA, MA , BED , முன் அனுமதி பெற்றும், SR ல் பதிவு இல்லாமலும்,AEEO கைெயாப்பம் இல்லாமலும், மற்றும் இதர சில பதிவுகள் விடுபட்டும் இருந்தன.இது தொடர்பாக குறைதீர் கூட்டத்தில் இரண்டு முறை விண்ணப்பம் கொடுத்தும் முறையான பதில் தரவில்லை.மேலும் SSTAவின் சேலம் மாவட்ட செயலாளர் திரு.தமிழ்தென்றல் அவர்கள் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களிடம், விடுபட்ட பதிவுகளை பதிவு செய்து தருமாறு வலியுறுத்தினார்.இதே கோரிக்கையை காடையாம்பட்டி வட்டார SSTA கிளை நிர்வாகிகளும் வலியுறுத்தினார்கள். உதவி தொடக்கக்கல்வி அலுவலரும் விடுபட்ட பதிவுகளை பதிவு செய்து தருவதாக உறுதி அளித்துவிட்டு காலதாமதம் செய்யப்பட்டது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் சில வினாக்கள் கேட்கப்பட்டது. மேலும் SSTA வின் மாநில பொதுச்செயலாளர் அவர்கள் சேலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களிடம்,காடையாம்பட்டி ஒன்றியத்தில் விடுபட்ட பணிப்பதிவேடுகளை உடனடியாக பதிவு செய்து தருமாறு வலியுறுத்தினார் அவரின் SSTA வின் கோரிக்கையை ஏற்று மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரும் ஓரிரு நாட்களில் இது தொடர்பாக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்கிறேன் என்று உறுதி அளித்தார். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், உத்தரவின்படி (16.10.2014) அன்று உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஒரேநாளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் விடுபட்ட பதிவுகள் அனைத்தும் பதிவு செய்து கையொப்பமிட்டுள்ளார் . SSTAவின் தொடர் முயற்சியின் மூலம் அனைத்து இயக்க ஆசிரிய பெருமக்களும் எந்தவொரு செலவின்றி பரப்பளவையும் இதர பயனையும் அடைந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். மேற்கண்ட குறைகளை களைவதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட தொடக்கக்கல்விஅலுவலர் (DEEO)அவர்களும்,உதவி தொடக்கக்கல்வி அலுவலர(AEEO) அவர்களும் மற்றும் AEEO அலுவலக பணியாளர்களும், SSTA மாநில/மாவட்ட நிர்வாகிகளுக்கும், காடையாம்பட்டி ஒன்றிய ((SSTA)) சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உண்மையைச் சொல்வோம்!!! சொல்வதைச் செய்வோம்!!! ((இணைவீர் SSTA வில்))_((ஆதரிப்பீர் SSTA வை)) ஒன்றுபடுவோம் அனைத்தையும் வெல்வோம்!!!
