10,000 புதிய பணியிடங்களை உருவாக்க வலியுறுத்தி மருந்தாளுநர்கள் போராட்டம்

தமிழகத்தில் பத்தாயிரம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என தமிழக அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருந்தாளுநர்கள் கோரிக்கை விடுத்தனர்.


21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர்கள் சங்கத்தினர் சென்னையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தேவேந்திரன் கூறியது:

தமிழக அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 3,800 மருந்தாளுநர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 32 ஆண்டுகளாக இந்தப் பணியிடங்கள் அதிகரிக்கப்படவேயில்லை.

ஆனால் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும், நோயாளிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அதிகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும், நோயாளிகளின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு மருந்தாளுநர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். 100 புறநோயாளிகளுக்கு ஒரு மருந்தாளுநர், 75 உள்நோயாளிகளுக்கு ஒரு மருந்தாளுநர் என்ற விகிதத்தில் மருந்தாளுநர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அரசு மருத்துவர்களின் பணி நேரம் காலை 9 மணியிலிருந்து 4 மணி வரை ஆகும். ஆனால் மருந்தாளுநர்களின் பணி நேரம் காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணியாக இருக்கிறது. மருத்துவர்கள் மருந்துகளைப் பரிந்துரைக்கும் சமயத்தில்தான் மருந்தாளுநர்கள் மருந்துகளை வழங்க முடியும். அதனால் எங்கள் பணி நேரத்தையும் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆறு ஆண்டுகளாகப் போராடி வருகிறோம்.

எங்கள் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...