16 தலைமை ஆசிரியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடர்கிறது .

நாமக்கல் மாவட்டத்தில், ஆதிதிராவிட பிரிவைச் சேர்ந்த மற்றும் சுகாதாரமற்ற தொழில் புரியும் பெற்றோரின், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு,
ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில், கடந்த சில ஆண்டுக்கு முன், 68.46 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது.
இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த, 79 தலைமையாசிரியர்கள் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.இது தொடர்பாக, கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, 79 தலைமையாசிரியரை, கடந்த 2012ம் ஆண்டு, ஆக., மாதம், 'சஸ்பெண்ட்' செய்தனர். பின், ஆறரை மாத இடைவெளிக்கு பின், மீண்டும் பள்ளிக்கு திரும்பினர்.எனினும், துறை ரீதியான விசாரணை நடந்து வந்தது. இதில், 63 பேர் தவிர, குற்றவியல் வழக்கில் சிக்கிய, 16 பேரின் பிரச்னை தொடர்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...