37 ஆண்டுகளுக்கு பிறகு அதிகரிக்கிறது தின௯லி பார்ப்பவர்களின் ஊதியம்

தமிழகத்தில், தினக்கூலி பணியாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை, 37 ஆண்டுகளுக்குப் பின், தமிழக அரசு மறு நிர்ணயம் செய்கிறது. இதற்கான ஆலோசனை துவங்கி உள்ளது. ஒரு லட்சம் பேர்:தமிழக
உள்ளாட்சி அமைப்புகளில், துப் புரவு பணி, கொசு ஒழிப்பு, மழைநீர் கால்வாய் பராமரிப்பு, குடிநீர் தொட்டி பராமரிப்பு என, பல்வேறு நிலைகளில், ஒரு லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.தமிழக அரசு, 1977ல், திறன் படைத்த தொழிலாளர்களுக்கு, 145 ரூபாய்; சாதாரண தொழிலாளர்களுக்கு, 85 ரூபாய் என, குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயித்தது; அதன்பின், திருத்தம் செய்யவில்லை.
மாநகராட்சி, நகராட்சிகளில் ஓரளவு சம்பளம் தரப் பட்டாலும், ஊராட்சி அளவில், நிலைமை மோசமாக உள்ளதால், 37 ஆண்டுகளுக்குப் பின், குறைந்த பட்ச ஊதியத்தை மறு நிர்ணயம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது.
தொழிலாளர் நல துணை ஆணையர் ராதாகிஷ்ணன் தலைமை யில், செயலர் சுப்பிரமணி உள்ளிட்ட, 11 பேர் கொண்ட, குறைந்தபட்ச கூலி மறு நிர்ணயக் குழுவை அரசு அமைத்துள்ளது. இதில், அரசு பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர்.
பரிந்துரை:இக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடந்தது. தொழிலாளர், தொழிற்சங்க நிர்வாகிகளும் கருத்து தெரிவித்தனர்.மறு நிர்ணயக்குழு தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்த உள்ளோம். அடுத்த கூட்டம், நவ., 28ம் தேதி, மதுரையில் நடக்கும். தொழிலாளர் பணி இடங்களிலும் ஆய்வு செய்வோம். ஆலோசனை முடிவில், குறைந்த பட்ச கூலி நிர்ணயம் செய்யப்பட்டு, அரசுக்கு பரிந்துரைக்கப்படும்,'' என்றார்.
தொழிலாளர் எதிர்பார்ப்பது என்ன?
*தினசரி சம்பளமாக தொழில்நுட்பம் சார்ந்த பணியாளர்களுக்கு - 500 ரூபாய், பிற தொழிலாளர்களுக்கு - 400 ரூபாய் சம்பளம் வேண்டும்.
*மாத ஊதியம் என்றால் குறைந்த பட்சம், 10 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயிக்க வேண்டும்; இதர படி, சலுகைகள் தர வேண்டும்.
*பகுதிநேர பணியில் உள்ள, குடிநீர் தொட்டி பராமரிப்பாளர்களுக்கு, 200 ரூபாய் என, குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
*ஒப்பந்தம் சார்ந்த பணி என்றால், நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கூலியை, ஒப்பந்ததாரர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...