சென்னை உள்ளிட்ட 6 மெட்ரோ நகரங்களில் மாதத்துக்கு 5 முறைக்கு கூடுதலாக ஏடிஎம் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கும்நடைமுறை நாளை அமலுக்கு வருகிறது.
அதன்படி, கணக்கு வைத்திருக்கும்
வங்கியின் ஏடிஎம்மை மாதத்தில் 6-வது முறை பயன்படுத்தும் போதிலிருந்து ஒவ்வொரு முறையும் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. பணம் எடுப்பது மட்டுமின்றி, கணக்கில் இருப்பை அறிவது, மினிஸ்டேட்மென்ட் எடுப்பது ஆகிய பணமல்லாத நடவடிக்கைகளும் இந்த எண்ணிக்கையில் அடங்கும்.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையின்படி சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 6 மெட்ரோ நகரங்களில் மட்டும் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய இந்த நகரங்களில் வங்கி வாடிக்கையாளர்கள் பிற வங்கி ஏடிஎம்மை பயன்படுத்தும் அனுமதியும் 5-ல் இருந்து 3-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
எனினும், சென்னையல்லாத தமிழகத்தின் பிற பகுதிகளிலும், பூஜ்யம் இருப்பு வைக்க அனுமதியுள்ள சிறிய சேமிப்பு கணக்குகளிலும் இப்போதுள்ள நிலையே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கியின் தகவல் தெரிவிக்கிறது.