உலகில் உள்ள 6 செம்மொழிகளில் நம் தேசத்தில் இரு மொழிகள்!

உலகில் உள்ள 6000 மொழிகளில், 6 மொழிகள் செம்மொழி அந்தஸ்தில் உள்ளன;அதில் இரு மொழிகள் நம் நாட்டில் தான் உள்ளன' என, தெரிவிக்கப்பட்டது.


நீலகிரி மலைச்சாரல் தமிழ் கவிஞர் பெருமன்றம் சார்பில், கவிதை நூல் வெளியீட்டு விழா, ஊட்டி புனித பிலோனிமா துவக்கப்பள்ளியில் நடந்தது.கவிஞர் பெள்ளி வரவேற்றார். மலைச்சாரல் தமிழ்க் கவிஞர் மன்ற தலைவர் சோலூர் கணேசன் தலைமை வகித்தார். காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, நூல் வெளியிட்டு பேசுகையில்,""யுனெஸ்கோ நிறுவனம் இன்னும் 50 ஆண்டுகளில் தமிழ் அழிந்துவிடும் என்ற அதிர்ச்சி அளிக்கும் செய்தியை அறிவித்துள்ளது. அது உண்மை என்பதை நாம் உணரவேண்டும். ஏனெனில், இன்றைய இளைஞர்கள் மத்தியில் தமிழ் இலக்கியம் குறித்த புலமை இல்லை. பெற்றோர்கள் தாங்கள் கற்ற மொழியை தங்களது குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பதை மறந்துவிடுகின்றனர்.மாறாக, தங்களது குழந்தைகள் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசவேண்டும் என்பதற்காக ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தருகின்றனர். தமிழ் மொழி வாழவேண்டும் என்றால், தமிழ் பயிற்சியுடன் கூடிய முயற்சி அவசியமாகும். உலகில் உள்ள 6000 மொழிகளில், 6 மொழிகள் செம்மொழி அந்தஸ்தில் உள்ளன. அதில், இரு மொழிகள் நம் நாட்டில் தான் உள்ளன.

அனைத்து மொழிகளையும் நேசிக்கவேண்டும். அதே நேரத்தில் தமிழ் மொழியை பூஜிக்கவேண்டும். தொன்மைவாய்ந்த தமிழ்மொழி காப்பாற்றப்படவேண்டும். பண்பாட்டை வெளிப்படுத்துவது மொழிதான். மேலை நாடுகளின் பண்பாடு பணத்தை சார்ந்துள்ளது. நமது நாட்டில் பண்பாடு மொழியை சார்ந்துள்ளது. புது கவிதையில் சொற்சிக்கனம், அர்த்த அடர்த்தி இருக்கவேண்டும். கவிதை எழுதுபவர்களுக்கு சமூக சிந்தனை இருக்கவேண்டும். அந்த சிந்தனையுடன் கவிதை படைத்தால் தான் சிறப்பாக அமையும். இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.இதில், தொழில் அதிபர் போஜராஜன், காந்திய மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வள்ளிரமேஷ், மலைச்சாரல் கவிஞர் மன்ற மாவட்ட செயலாளர் பிரபு, கவிஞர் ஜேபி, ஜனார்த்தனன், ராஜூபெட்டனர் உட்பட பலர் பங்கேற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...