7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமைச் செயலர் நிலைக்கு உயர்வு

தமிழகத்தில் ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமைச் செயலாளர் நிலைக்கு உயர்வு பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் கூடுதல் தலைமைச் செயலாளர் நிலையில் தங்களது பதவியைத் தொடர்வார்கள் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.


தலைமைச் செயலாளராக மோகன் வர்கீஸ் சுங்கத் பதவி வகிப்பதால், நிலை உயர்வு பெற்றுள்ள ஏழு பேரும் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக அழைக்கப்படுவர். அவர்கள் அனைவரும் இப்போது வகிக்கும் பதவியிலேயே தொடர்வார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதன்மைச் செயலாளர் நிலையில் இருந்து கூடுதல் தலைமைச் செயலாளர் நிலைக்கு பதவி உயர்வு பெற்றுள்ள அதிகாரிகளின் விவரம் குறித்து தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் பிறப்பித்துள்ள உத்தரவு:

 தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் கே.ஞானதேசிகன், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கே.ஸ்கந்தன், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ரமேஷ்குமார் கண்ணா, தொழில் துறைச் செயலாளர் சி.வி.சங்கர், உயர்கல்வித் துறைச் செயலாளர் ஹேமந்த்குமார் சின்ஹா, மத்திய அரசின் கடல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் லீனா நாயர், போக்குவரத்துத் துறைச் செயலாளர் டி.பிரபாகர ராவ் ஆகியோர் தலைமைச் செயலாளராக நிலை உயர்வு அளிக்கப்பட்டு, கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகிப்பர் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...