தொலை­பேசி சந்­தா­தாரர் எண்­ணிக்கை 94 கோடி!

நடப்பு, 2014ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரை­யி­லான காலாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த தொலை­பேசி சந்­தா­தாரர் எண்­ணிக்கை, 94.29 கோடி­யாக அதி­க­ரித்­துள்­ளது.முந்­தைய ஜன.,– மார்ச் காலாண்டில், இந்த எண்­ணிக்கை, 93.30 கோடி­யாக இருந்­தது. ஆக, மதிப்­பீட்டு
காலாண்டில், தொலை­பேசி சந்­தா­தாரர் எண்­ணிக்கை, 1.07 சத­வீதம் வளர்ச்சி கண்­டுள்­ளது என, இந்­திய தொலைத் தொடர்பு ஒழுங்­கு­முறை ஆணையம் (டிராய்)தெரி­வித்­துள்­ளது.குறிப்­பாக, மதிப்­பீட்டு காலாண்டில், மொபைல் போன் (ஜி.எஸ்.எம்+சி.டி.எம்.ஏ.,) சந்­தா­தாரர் எண்­ணிக்கை, 1.04 கோடி அதி­க­ரித்து, 90.45 கோடி­யி­லி­ருந்து, 91.49 கோடி­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது. இது, 1.15 சத­வீத வளர்ச்­சி­யாகும்.
அதே­ச­மயம், சாதா­ரண தொலை­பேசி வாடிக்­கை­யாளர் எண்­ணிக்கை, 2.85 கோடி­யி­லி­ருந்து, 2.80 கோடி­யாககுறைந்­துள்­ளது.கணக்­கீட்டு காலாண்டில், இன்­டர்நெட் சந்­த­தாரர் எண்­ணிக்கை, 3 சத­வீதம் உயர்ந்து, 25.16 கோடி­யி­லி­ருந்து, 25.91 கோடி­யாக அதி­க­ரித்­துள்­ளது.ஒரு ஜி.எஸ்.எம்., வாடிக்­கை­யாளர் மூலம் கிடைக்கும் மாதாந்­திர சரா­சரி வருவாய், மதிப்­பீட்டு காலாண்டில், 113 ரூபா­யி­லி­ருந்து, 119 ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இதே போன்று, சி.டி.எம்.ஏ., வாயி­லான சரா­சரி வரு­வாயும், 105 லிருந்து, 112ஆகஅதி­க­ரித்­துள்­ளது என, டிராய் மேலும்தெரி­வித்­துள்ளது.
இதற்­கி­டையே, தொலைத் தொடர்பு சேவை நிறு­வ­னங்கள், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, ‘மொபைல் நம்பர் போர்­ட­பி­லிட்டி’ வச­தியை வரும், மே மாதத்­திற்குள் முழு­மை­யாக அளிக்க வேண்டும் என, தொலைத் தொடர்பு துறை உத்­த­ர­விட்­டுள்­ளது.தற்­போது, இந்த வச­தியை ஒரு குறிப்­பிட்ட வட்­டத்­திற்குள் தான் பயன்­ப­டுத்த முடியும் என்ற நிலை உள்­ளது.தொலைத் தொடர்பு துறையின் இந்த புதிய உத்­த­ரவு செயல்­ப­டுத்­தப்­படும் நிலையில், உள்­நாட்டில், எங்கு சென்­றாலும், ஒரே மொபைல் எண்ணை தக்க வைத்து கொள்­வ­தோடு, தேவை­யானால், சேவை நிறு­வ­னங்­களை மாற்றி கொள்­ளலாம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...