அரசு பாடப் புத்தகங்கள் மாயமான விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருந்த சரவணகுமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
சமச்சீர் கல்வி திட்டத்தில் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத கோவை மாவட்டத்துக்குரிய 350 டன் பாடப் புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டன.
கடந்த பிப்ரவரி மாதம் இருப்பு வைக்கப்பட்ட புத்தகங்கள் குறித்து தமிழக அரசு விளக்கம் கேட்டபோது, கோவையில் இருப்பு வைக்கப்பட்ட 350 டன் பாடப் புத்தகங்களும் மாயமான தகவல் வெளிவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், கோவை மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் உள்பட 7 பேர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சரவணகுமார் செவ்வாய்க்கிழமை மாநகர குற்றப்பிரிவு போலீஸார் முன்னிலையில் ஆஜரானார். விசாரணையில் புத்தகங்கள் மாயமான விவகாரத்தில் அவருக்கு நேரடி தொடர்பிருப்பது உறுதியானது. இதையடுத்து போலீஸார், அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.