வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.


கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதே மையங்களில் இந்த வாரமும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகள் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்த திருத்தத்தின்போது, பட்டியலில் பெயரைச் சேர்க்கவும், திருத்தங்கள் இருந்தால் அவற்றைச் சரிசெய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சிறப்பு முகாமில், 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் லட்சக்கணக்கானோர் தங்களது விண்ணப்பங்களை அளித்தனர். மேலும், பலர் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமும் விண்ணப்பித்திருந்தனர். இதுவரை பெயர்சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவற்றுக்காக 8 லட்சம் பேர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.

எதற்கு எந்த விண்ணப்பம்? வாக்காளர் சிறப்பு முகாம்களுக்குச் செல்வோர், பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அங்கேயே பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். 1.1.2015 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் (1.1.1997 ஆம் தேதிக்கு முன் பிறந்தவர்கள்) வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க படிவம் 6-ம், வெளிநாட்டில் வாழும் ஒருவரின் பெயரைச் சேர்க்க படிவம் 6ஏ-ம், பெயரை நீக்க படிவம் 7-ம், பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-ம், சட்டப் பேரவைத் தொகுதிக்குள் இடம்பெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8ஏ-ம், மாற்று வாக்காளர் அட்டை பெறுவதற்காக படிவம் 001-ஐயும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

இணையதளத்திலும்... பொதுமக்கள் www.elections.tn.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் பெயர்கள் சேர்த்தல், நீக்கம், திருத்தங்கள் தொடர்பாக விண்ணப்பிக்கலாம்.

இதே இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். சென்னையில் வாக்காளர் பதிவு சேவைக்காகக் கட்டண அடிப்படையில் 40 இணையதள மையங்களுடன் சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இதுவே கடைசி முகாம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் நவம்பர் 10-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதேசமயம், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நடைபெறும் சிறப்பு முகாமே கடைசி முகாமாகும். இதன் பிறகு தாலுகா,

மாநகராட்சி அலுவலகங்களுக்குச் சென்று பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...