கல்வியில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டாம்

கல்வியில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பு சார்பில் பொள்ளாச்சி பகுதியில் தெருமுனைப் பிரசாரம்
வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், "தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை கட்டணம் இல்லாமல் தாய் மொழியில் கல்வி கற்பிக்க வேண்டும். உயர் கல்வியில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது. பல்கலைக்கழக மானியக் குழுவை வலுப்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகள் அதிகக் கட்டணம் வசூல் செய்வதை அரசு தடுக்க வேண்டும்' போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தப் பிரசாரத்தில் கல்வியாளரும், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளருமான கஜேந்திரபாபு, இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் கனகராஜ், மாணவர், பெற்றோர் நலச் சங்க மாநில துணைத் தலைவர் தெய்வேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் குகன்மில் செந்தில், தபெதிக மாநில வெளியீட்டுச் செயலாளர் மனோகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் மகாலிங்கம், தமுமுக நகரத் தலைவர் முஸ்தபா, திமுக நிர்வாகி கண்ணுச்சாமி, ஆதித் தமிழர் இளைஞர் பேரவை நிர்வாகி கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...