அடிப்படையே தெரியாத ஆசிரியை: இது உ.பி. மாநில கொடுமை

உ.பி.,யில், 315ஐ, மூன்றால் வகுக்க தெரியாமல், திருதிருவென விழித்த பள்ளி ஆசிரியை, கல்வி துறை அதிகாரியால் அதிரடியாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


உ.பி., மாநிலம் கான்பூர் அருகே, ஹர்கா என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள தொடக்கப் பள்ளியில் ஆய்வு நடத்துவதற்காக, கல்வி துறை அதிகாரி ராஜேந்திர பிரசாத், சமீபத்தில் சென்றார். அவர் சென்றபோது, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பெரும்பாலான ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வெளியில், மொபைல் போனில் அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.

பின், அங்குள்ள மூன்றாம் வகுப்புக்கு அந்த அதிகாரி சென்றார். மாணவிகள் சிலரை எழுப்பி, 315 என்பதை எண் வடிவில் எழுதும்படி கூறினார். அவர்களுக்கு எழுத தெரியவில்லை; சில மாணவர்கள் தவறாக எழுதினர். அதிர்ச்சி அடைந்த அதிகாரி, வகுப்பாசிரியை ருசி ஸ்ரீவத்சவாவிடம், 315 ஐ, மூன்றால் வகுத்து காட்டும்படி கூறினார்.

ஆனால், அவர், அதை வகுக்க முடியாமல், திருதிருவென விழித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் அதிகாரி ராஜேந்திர பிரசாத். இதையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர், மூன்றாம் வகுப்பு ஆசிரியை ருசி, மம்தா, சபனா ஆகிய ஆசிரியைகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...