சென்னையில் இருந்து டில்லிக்கு 7 மணி நேரத்திலே சென்றுவிடும் விதத்தில் புல்லட் ரெயில் இயக்குவதற்கான ஆய்வுப்பணி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
பிரதமர் ஆர்வம்:
அதிவேக புல்லட் ரெயில் என்பது இந்தியாவில் இன்னும் கனவாகவே இருக்கிறது. இந்த கனவு திட்டத்தை நிறைவேற்றுவதில் பிரதமர் நரேந்திர மோடி ஆர்வமாக உள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ரெயில் பட்ஜெட்டை தாக்கல் செய்த ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, 'புல்லட் ரயில் என்ற நீண்ட கால கனவை ரயில்வே நிறைவேற்றப்போகிறது. அந்த வகையில் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள மும்பை-ஆமதாபாத் தடத்தில் புல்லட் ரயில் இயக்கப்படும். இதற்கான பல்வேறு ஆய்வுகள் நடந்து முடிந்துவிட்டன என தெரிவித்துள்ளார்.
சீனாவிடம் ஒப்படைப்பு:
இந்த நிலையில், சென்னை-டில்லி இடையே புல்லட் ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயும் பணியை சீனாவை சேர்ந்த சீனா ரெயில் ஹைஸ்பீட் நிறுவனத்திடம் ரயில்வே வாரியம் கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்படைத்தது. இந்த ஆய்வில் அந்த நிறுவனத்துடன் ரயில் விகாஸ் நிகாம் இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.சீன அதிபர் ஜின் பிங் சமீபத்தில் இந்தியா வந்திருந்தபோது, மத்திய அரசு, சீன அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு அங்கம் தான் இந்த நடவடிக்கை.
ஒரு ஆண்டுகள் ஆய்வு:
ஆய்வுப்பணியை நடத்தி முடிக்க 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரை ஆகும். சாதாரணமாக ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் தடம் அமைக்க ரூ.5 கோடி செலவு ஆகும். அதுவே புல்லட் ரெயிலுக்கான தடம் என்றால் ரூ.126 கோடி வரை செலவு பிடிக்கும்.இந்த புல்லட் ரெயில் தடத்தை பிரான்சு, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனா அமைத்து தந்தால் 30 சதவீதம் மலிவாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
சென்னை-டில்லி இடையேயான 2,182 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரெயில் பாதை அமைத்து அதில் ரயில் இயக்கப்பட்டால் சென்னையில் இருந்து டில்லிக்கு 7 மணி நேரத்தில் சென்றுவிடலாம்.தற்போது சென்னையில் இருந்து டில்லிக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயண நேரம் 28 மணிநேரம் ஆகிறது.